சேரர் பாண்டியர் வணங்கியது கூறிக் குற்றுதல் 530. | வணங்கிய சேரர் மணிமுடியும் | | வழுதியர் தங்கள் மணிமுடியும் பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே. | (பொ-நி.) சேரர் மணி முடியும் வழுதியர் தங்கள் மணி முடியும் பிணங்கிய சேவடி பாடீர்! பெருமான் திருவடி பாடீர்! (எ-று.) (வி-ம்.) வழுதியர் - பாண்டியர். பிணங்கிய - ஒன்று சேர்ந்த. சேவடி -சிவந்த அடிகள். பெருமான்-பெருமைமிக்கவன். (59) |