வடஅரசரை அடிப்படுத்தியது கூறிக்குற்றுதல் 531. | ஒளிறு நெடும்படை வாளபயற் | | குத்தர பூமியர் இட்டதிறைக் களிறு வரும்படி பாடீரே கடமத நாறுவ பாடீரே. | (பொ-நி.) அபயற்கு உத்தர பூமியர் இட்ட திறைக்களிறு வரும்படி பாடீர்! கடம் மதம் நாறுவ பாடீர். (எ-று.) (வி-ம்.) ஒளிறு - ஒளி விளங்குகின்ற. வாள்படை என இயைக்க. உத்தரம் - வடக்கு. இட்ட திறை - தந்த திறைப்பொருளை, திறையைச் சுமந்துவரும் களிறு என்க. வரும்படி-வரும் தன்மை. கடம்-யானைக் கூட்டம். மதம் நாறுவ - மதநாற்றம் வீசுவன. (60) |