கடற்றீவகத்து வென்றிகொண்ட தன்மை கூறிக் குற்றுதல

532.பௌவம் அடங்க வளைந்த குடைப்
       பண்டித சோழன் மலர்க்கழலில்
தெவ்வர் பணிந்தமை பாடீரே
     சிலையா டியவலி பாடீரே.

     (பொ-நி.) குடைச்சோழன் மலர்க்கழலில் தெவ்வர் பணிந்தமை பாடீர்! சிலை ஆடிய வலி பாடீர்! (எ-று.)

     (வி-ம்.) பௌவம் - கடல். அடங்க - முடிய. பண்டிதசோழன் - முதற் குலோத்துங்கன்.  தெவ்வர் - பகைவர். சிலை -வில். ஆடுதல்-போர் செய்தல்; வென்றி கொள்ளல். வலி-வல்லமை.                                (61)