கருணாகரனைப் பாடிக் குற்றியது

534.வண்டை வளம்பதி பாடீரே
      மல்லையும் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே
     பல்லவர் தோன்றலைப் பாடீரே.
 

     (பொ-நி.)  வண்டைப்பதி   பாடீர்!   மல்லையும்   கச்சியும் பாடீர்!
மயிலையும்  பாடீர்!  பல்லவர்  தோன்றலைப்  பாடீர்!  (எ-று.)

     
(வி-ம்.)  வண்டை- கருணாகரன்  ஊர். கச்சி - காஞ்சிபுரம்.பல்லவர்
தோன்றல்- கருணாகரன்.  மல்லை,  கச்சி,  மயிலை  என்பன  கருணாகரன்
ஆட்சிக் குட்பட்டிருந்தன போலும். தொண்டையர் வேந்தன் எனப் பின்னும்
வருவது காண்க.                                             (63)