இதுவும் அது

535.காட்டிய வேழ அணிவாரிக்
       கலிங்கப் பரணிநங் காவலன்மேற்
சூட்டிய தோன்றலைப் பாடீரே
      தொண்டையர் வேந்தனைப் பாடீரே.

     (பொ-நி.) வேழ  அணி  வாரி,  பரணி சூட்டிய தோன்றலைப் பாடீர்! தொண்டையர்  வேந்தனைப்  பாடீர்!  (எ-று.)

     (வி-ம்.) காட்டிய -போர்க்களத்தில் மிக்குத் தோன்றிய. வேழம்-யானை. அணி-கூட்டம். வாரி- கொள்ளைகொண்டு. காவலன் குலோத்துங்கன். சூட்டிய-சூட்டுதற்குக்   காரணனாய்   இருந்தமையின்  சூட்டிய  என்றார்.  தோன்றல்: கருணாகரன்-தொண்டையர் வேந்தன்: கருணாகரன்.                   (64)