பல்லரசரும் அடிவணங்கல் கூறிக் குற்றியது | 537. | முடிசூடும் முடியொன்றே முதலபயன் எங்கோமான் | | | அடிசூடும் முடியெண்ணில் ஆயிரநூ றாயிரமே. |
(பொ-நி.) அபயன் முடி சூடும் முடி ஒன்றே; அடிசூடும் முடி ஆயிர நூறாயிரம்; (எ-று.) (வி-ம்.) முடி-தலை. முடி-கிரீடம். அடி-பாதம், முடி-சிற்றரசர்முடிகள். முதற்குலோத்துங்கசோழனின் தலைஒன்றே முடிசூடுதற்குரியது. மற்ற அவன் அடி சூடுவன எண்ணற்ற அரசர்களின் முடிகளே என்பது, இவன் திருவடிகளில் வணங்கும் வேந்தர்க்கு அளவில்லை என்றபடியாம். (66) |