பகைவேந்தர் அழிந்தமை கூறிக் குற்றுதல் 538. | முடியினால் வழிபட்டு மொழிந்ததிறை இடாவேந்தர் | | அடியினால் மிதிபட்ட அருவரைநூ றாயிரமே. | (பொ-நி.)வழிபட்டுத் திறைஇடாவேந்தர் அடியினால், மிதிபட்ட வரை நூறாயிரம்; (எ-று.) (வி-ம்.) வழிபடுதல் - வணங்கல். மொழிந்த - குலோத்துங்கன் மொழிந்த. அடி - பாதம், வரை-மலை. திறைஇடாவேந்தர் மலைகளிலோடி யொளிக்க நேர்ந்த தென்க. திறைசெலுத்தா வேந்தர் ஓடியோடி ஒளித்த மலைகள் எண்ணில. எனவே, குலோத்துங்கன் ஏற்றங் கூறிய தறிக. (67) |