மாற்றரசர் ஒளி இழந்த தன்மை கூறிக் குற்றியது
 

539.தார்வேய்ந்த புயத்தபயன் தன்னமைச்சர் கடைத்தலையில்
 பார்வேந்தர் படுகின்ற பரிபவம்நூ றாயிரமே.
 
     
(பொ-நி.) அபயன்தன் அமைச்சர் கடைத்தலையில் வேந்தர் படுகின்ற
பரிபவம் நூறாயிரம்; (எ-று.)

     (வி-ம்.) தார்-மாலை. கடைத்தலை-தலைவாயில்; முற்றம் -சொல்நிலை
மாறிய இலக்கணப் போலி. பரிபவம்-பெருமைக்குறைவு. நூறாயிரம் - மிகப்பல.
பல  வேந்தர்  குலோத்துங்கன்  அருள்பெற  அவன்  அமைச்சரை நாடியது
கூறியவாறாம்.                                                (68)