இதுவும் அது

54. மதுர மானமொழி பதற வான்விழிசி
     வப்ப வாயிதழ்வெ ளுப்பவே
அதர பானமது பான மாகஅறி
   வழியு மாதர்கடை திறமினோ.

     (பொ-நி) மொழி பதற, விழி சிவப்ப, இதழ் வெளுப்ப, அதரபானம்
மதுபானமாக அறிவழியும் மாதர் திறமின்; (எ-று.)

   
 (வி-ம்.) மதுரம் - இனிமை.  மொழி - சொல்.பதற-தடுமாற. வாள்-
ஒளிபொருந்திய.  இதழ் - உதடு.  அதரம் - உதடு.  பானம் - பருகுவது.
மதுபானம் -கள்.  இதுவும்  கலவி  இயல்பு   கூறியது.கள்ளுண்டார்க்கும்
கலவியில்  திளைத்தாகக்கும்  சொல்  தடுமாறுதலும், கண்கள் சிவத்தலும்,
வாயிதழ்கள்  வெளுத்தலும்   இயல்பு.   ஆகலான்  இரண்டு  நிலையும்
ஒன்றார் இணைத்துக் கூறினார்.                               (34)