| மறைவளர்த்தமை கூறிக் குற்றியது | 540. | தாங்காரப் புயத்தபயன் தண்ணளியால் புயல்வளர்க்கும் | | | ஓங்கார மந்திரமும் ஒப்பிலநூ றாயிரமே. |
(பொ-நி.) அபயன் அளியால் புயல் வளர்க்கும் மந்திரமும் நூறாயிரம்; (எ-று.) (வி-ம்.) ஆரம் தாங்கு புயம் என இயைக்க. ஆரம்-மாலை. தாங்கு -அணிகின்ற; முக்கால வினைத்தொகை. அளி - அருள். புயல்-மழை.ஓங்கார மந்திரம்-மறை நூலிலுள்ளன. ஒப்புஇல வரையரை இல்லாதன.மழை தவறாது பொழிதற்குக் காரணமான மறை ஓம்புதலைக் குலோத்துங்கன் மேற்கொண்டிருந்தான் என்பதாம். (69) |