உலகமுழுதும் ஆண்ட மேன்மை கூறிக் குற்றியது

541.போர்தாங்கும் களிற்றபயன் புயமிரண்டும் எந்நாளும்
 பார்தாங்கப் பரந்தீர்ந்த பணிப்பணம்நூ றாயிரமே.
 

     (பொ-நி.) அபயன்   புயம்   இரண்டும்   பார்தாங்கப்   பரம்தீர்ந்த
பணிப்பணம்  நூறாயிரம்;  (எ-று.)

     (வி-ம்.)  தாங்குதல் -  மேற்கொண்டு   புரிதல்.   களிறு  - யானை.
புயம் - தோள். பார் - உலகம். தாங்க - தாங்குதலால்:  காரியப்பொருட்டாக
வந்த  செயவெனெச்சம்.  பரம் - சுமை. பாரம்,  பரமென  முதல்  குறுகியது.
பணி - ஆதி  சேடனாகிய  பாம்பு. பணம் - படம்(தலை).            (70)