இதுவும் அது
 
544.சூழிமுகக் களிற்றபயன் தூதுநடந் தருளியநாள்
 ஆழிமுதற் படையெடுத்த அணிநெடுந்தோ ளாயிரமே.
 

     (பொ-நி.) அபயன்  தூது  நடந்தருளிய  நாள்படை  (யை)  எடுத்த
தோள் ஆயிரம்; (எ-று.)

     
(வி-ம்.) சூழி-முகபடாம். களிறு-யானை.  தூது-பாண்டவர்க்குத்  தூது.
ஆழி-சக்கரம்.  படை - போர்க்கருவிகள்.  அணி - அழகிய.  கண்ணபிரான்
துரியோதனன்பால்  தூதுசென்று  ஆங்கே பேருருவங்கொண்டு நின்ற பாரத
வரலாற்றைக்  குறித்து.  இதுவும் அவ்வாறே ஏற்றிக் கூறியதறிக.       (73)