குற்றிய அரிசியைப் புடைத்தல 545. | பல்லரிசி யாவுமிகப் பழவரிசி தாமாகச் | | சல்லவட்டம் எனுஞ்சுளகால் தவிடுபடப் புடையீரே. | (பொ-நி.) அரிசி யாவும் பழ அரிசி ஆக, சல்லவட்டம் எனும் சுளகால் புடையீர்! (எ-று.) (வி-ம்.) பல்லரிசி : பண்புத்தொகை. ஆக-ஆகுமாறு. சல்லவட்டம்-ஒருவகைக் கேடகம். சுளகு - முறம். தவிடுபட- தவிடுபோக. (74) |