புடைத்த அரிசியை அளத்தல்

546.பாணிகளால் நிலந்திருத்திப் படைக்கலிங்கர் அணிபகழித்
 தூணிகளே நாழிகளாத் தூணிமா அளவீரே.

     (பொ-நி.) நிலம்  திருத்தி  பகழித்  தூணிகளே  தூணி  மாநாழிகளா
அளவீர்? (எ-று.)

     (வி-ம்.) பாணி - கை. திருத்தல் - தூய்மை செய்தல்.  பகழித்  தூணி
-அம்பறாத் தூணி. நாழி - அளக்குங் கருவி: மாக்கால். தூணிமாநாழி- நான்கு
மரக்கால் கொண்ட பெரிய படி அளவீர்-அரிசியை அளவீர்.           (75)