அளந்த அரிசியை உலையிலிடல் 547. | விரற்புட்டி லவைசிறிய விற்கூடை பெரியனகொண்டு | | உரற்பட்ட அரிசிமுகந்து உலைகள்தொறும் சொரியீரே. | (பொ-நி.) விரல் புட்டில் சிறிய; பெரியன விற்கூடை கொண்டு, முகந்து சொரியீர்! (எ-று.) (வி-ம்.) விரல் புட்டில்: வீரர்கள் கைவிரலில் அணியும் உறை. வில்கூடை - அம்பறாத் தூணி. விரல்உறை சிறியன ஆகையால் அம்பறாத் தூணியால் அரிசியை முகந்து சொரியீர் என்க. சிறிய பெரியன: முரண் தொடை. உரல்பட்ட - உரல்களிற் குற்றப்பட்ட. உலைகள் - சமைக்கும் பானைகள். (76) |