உலையிலிட்ட அரசிக்குத் துடுப்பும் அகப்பையும்

548.களப்பரணிக் கூழ்பொங்கி வழியாமல் கைதுடுப்பா
 அளப்பரிய குளப்புக்கால் அகப்பைகளாக் கொள்ளீரே.

     (பொ-நி.)   கூழ்    வழியாமல்,     கைதுடுப்பா,     குளப்புக்கால்
அகப்பைகளாகக் கொள்ளீர்! (எ-று.)

     (வி-ம்.)  களம்  -  போர்க்களம்.   பரணிக்   கூழ்  - பரணிநாளில்
அடப்படும்  கூழ்   ( முதன்முதல்   அடுப்பில்   நெருப்பிட்டுச்   சமைக்கத்
தொடங்குதற்குப்    பரணி    நாளே   கொள்ளப்படுவதாமென்க.)  பொங்க
- மேலெழுந்து.   கைதுடுப்பா   -  கையே   துடுப்பாக.  அளப்பு    அரிய
- எண்ணில்  அடங்காத.  குளப்புக்கால்  -  குதிரைகளின்  குளம்பையுடைய
கால். குளம்பு:குளப்பு என வலித்தல்விகாரம் பெற்றது.                 (77)