அட்ட கூழைப் பதம் பார்த்தல் 549. | வைப்புக் காணு நமக்கின்று | | வாரீர் கூழை எல்லீரும் உப்புப் பார்க்க ஒருதுள்ளி உள்ளங் கையிற் கொள்ளீரே. | (பொ-நி.) நமக்கு இன்று வைப்பு; வாரீர் ; கூழை உப்புப் பார்க்கக் கொள்ளீர்! (எ-று.) (வி-ம்.) வைப்பு - சேமித்து வைத்த பொருள் (போல் இனியது). ‘வைப்பு மாடென்று மாணிக்கத் தொளி என்று ‘ என்னும் மணிமொழிப் பெருமான் திருவாசகத்தானும் அறிக. வைப்பு - உற்றகாலத்து உதவுமாறு சிறிது சிறிதாகச் சேர்த்த பொருள். காணும்: முன்னிலை அசை. உப்புப் பார்த்தல் - சுவை பார்த்தல். துள்ளி-துளி (விரித்தல் விகாரம்.) (78) |