நோயும் மருந்துமாந்தன்மை கூறி விளித்தது

55. தங்குகண் வேல்செய்த புண்களைத்
     தடமுலை வேதுகொண் டொற்றியும்
செங்கனி வாய்மருத் தூட்டுவீர்
   
செம்பொன் நெடுங்கடை திறமினோ.

     (பொ-நி.) கண்வேல்  செய்த  புண்களை,  வேதுகொண்டொற்றியும்,
வாய்மருந் தூட்டுவீர் திறமின்; (எ-று.)

    
(வி-ம்.) கண்வேல் - ( தம்) கண்ணாகிய வேல். வேது - நோய்க்குச்
சூடான பொருள்களால் வேது கொடுத்தல் இயல்பாம். ஒற்றுதல் - ஒற்றடங்
கொடுத்தல்.   தங்கு - படிந்த;  சேர்ந்த.  வெப்பம் ஊட்டுதல்.  இதனை
‘கொம்மை  வரி  முலை  வெம்மைவேதுறீஇ' என்றார் இளங்கோவடிகளும்.
வாய்மருந்து  -  அதரபானம்.  புண்ணுக்கு  வேதும் மருந்தும்  ஈண்டுக்
கூறப்பட்டன. (35)