வெந்த கூழை நன்கு கிண்டுதல் 550. | அழலைக் கையிற் கொள்ளாமே | | அடுப்பை அவித்துக் கைத்துடுப்பாற் சுழலச் சுழலப் புடைஎங்கும் துழாவித் துழாவிக் கொள்ளீரே. |
(பொ-நி.) அழலை கொள்ளாமே அடுப்பை அவித்து, துடுப்பால் துழாவித் துழாவிக் கொள்ளீர் ! (எ-று.) (வி-ம்.) அழல் - தீ. கொள்ளாமே - கொள்ளாதிருத்தற் பொருட்டு. துழாவல் - கிண்டல். புடை - பக்கம். துழாவாவிடின் கூழ் பானையோடு பிடித்துக்கொள்ளுமாதலின் நன்கு துழாவப்பட்டதாம். (79) |