கையாற் பதம் பார்த்துக் கூழை இறக்கல
 
551.பற்றிப் பாரீர் இனிக்கூழின்
       பதமும் சுவையும் பண்டுண்ட
மற்றைக் கூழின் மிகநன்று
     வாரீர் இழிச்ச வாரீரே.

     (பொ-நி.) பற்றிப்  பாரீர்; பதமும் சுவையும் பண்டு  உண்ட  கூழின்
மிக நன்று ! வாரீர்!  இழிச்ச  வாரீர்  (எ-று.)

     (வி-ம்.)  பற்றிப்  பார்த்தல் - விரலால்  தொட்டுப்  பதம் பார்த்தல்,
பதம்-வெந்த  பதம்.  பண்டு  உண்ட - முன்பு  பலபோர்களிற்  கூழ் அட்டு
உண்ட, இழிச்ச - இறக்கிவைக்க. இழித்தல் - கீழிறக்கல், இது, இழிச்ச என, த,
ச போலியாயிற்று.                                             (80)