இதுவும் அது 552. | எடுத்துக் கைகள் வேகாமே | | இவுளித் துணியிட்டு இருமருங்கும் அடித்துப் பிடித்து மெத்தனவே அடுப்பி னின்றும் இழிச்சீரே. |
(பொ-நி.) கைகள் வேகாமே இவுளித் துணிஇட்டு. பிடித்து, மெத்தன இழிச்சீர்! (எ-று.) (வி-ம்.) எடுத்து - எடுத்தலினால். இவுளித்துணி - குதிரையின் தசைத்துண்டு ஆகியசீலை; முதலாகு பெயராகத் தசையை உணர்த்திற்று. இருமருங்கும் - இரண்டு பக்கமும். அடுத்துசேர்த்து. மெத்து - மெதுவாக; மென்மையாக. (81) |