கூழின் மிகுதி

553.ஒருவாய் கொண்டே இதுதொலைய
       உண்ண வொண்ணாது என்றென்று
வெருவா நின்றீர் ஆயிரம்வாய்
     வேண்டு மோஇக் கூழுணவே.

     (பொ-நி.) "ஒருவாய்கொண்டு  உண்ண  ஒண்ணாது"  என்று  என்று.
வெருவா  நின்றீர்;  உண்ண  ஆயிரம்  வாய்வேண்டுமோ?  (எ-று.)

     (வி-ம்.) ஒரு வாய் -  நம்  ஒரேவாய்,  தொலைய - இல்லையாமாறு.
ஒண்ணாது - இயலாது. வெருவல் - அஞ்சல். இக்கூழை உண்பதற்கு இன்னும்
பலர்  வேண்டுவதில்லை.  நாமே  போதுமென்றபடி.                 (82)