இதுவும் அது

554.வெந்த இரும்பிற் புகும்புனல்போல்
        வெந்தீப் பசியால் வெந்துஎரியும்
இந்தவிடம்பை நாத்தோய்க்கில்
      இக்கூ ழெல்லாம் சுவறாதோ.

     (பொ-நி.) எரியும்  நா  தோய்க்கில்,  இரும்பில்  புகும் புனல் போல் கூழெல்லாம் சுவறாதோ ! (எ-று.)

     (வி-ம்.) வெந்த. பழுக்கக் காய்ச்சிய. புனல்-நீர். விடம்பை-பிளவுபட்ட.
நா தோய்க்கில்-நாவைநனைத்தாலும். பசியால் வெந்து மிகச் சூடேறியுள்ள நம்
நாவை   இக்    கூழில்    வைத்தோமானாலும்கூழ்   நீர்ப்பசையற்றுவற்றிச்
சுண்டிப்போகுமென நாவின் வெப்பம் கூறியபடி.  சுவறுதல் - வறண்டுபோதல்.
                                                            (83)