இதுவும் அது 555. | பண்டு மிகுமோ பரணிக்கூழ் | | பார கத்தில் அறியேமோ உண்டு மிகுமோ நீர்சொன்ன உபாயம் இதுவும் செய்குவமே. | (பொ-நி.) பண்டு மிகுமோ? பரணிக்கூழ் அறியேமோ உண்டு மிகுமோ? உபாயம் இதுவும் செய்குவம்; (எ-று.) (வி-ம்.) பண்டு மிகுமோ- முன் அட்ட கூழ்களெல்லாம் இதைவிட மிகுதியாமோ. பாரகம்-உலகம். அறியேமோ-நாம் கண்டதில்லையா? மிகுமோ -மிகும் போலும். உபாயம் நாவைக்கூழிற் றோய்த்தல். (84) |