உணவுக்குமுன் நீர் வைத்துக்கொள்ளுதல
 
556.வெம்பும் குருதிப் பேராற்றில்
        வேண்டும் தண்ணீர் வேழத்தின்
கும்பங் களிலே முகந்தெடுத்துக்
      குளிர வைத்துக் கொள்ளீரே.

     (பொ-நி.)   தண்ணீர்    (ஐ)   குருதிப்   பேராற்றில்,  வேழத்தின்
கும்பங்களிலே முகந்து குளிரவைத்துக் கொள்ளீர்! (எ-று.)

     (வி-ம்.)  வெம்புதல் - சூடு  பரத்தல்.   குருதி - செந்நீர்.   கும்பம்
-மத்தகங்களாகிய   குடம்.  குளிரவைத்தல்  -  சூடு  குறையுமாறு  ஆற்றிக்
கொள்ளல். கொள்ளீர்- கொள்ளுங்கள்.  ஈர்:  ஏவல்  பன்மை  வினைமுற்று
விகுதி;  இங்கு  உடன்பாடு.                                    (85)