உண்கலம் அமைத்தல் 558. | போர்மண் டலிகர் கேடகத்தின் | | புளகச் சின்னம் பரப்பீரே பார்மண் டலிகர் தலைமண்டை பலமண் டைகளாக் கொள்ளீரே. | (பொ-நி.) கேடகத்தின் புளகச் சின்னம் பரப்பீர் ! தலைமண்டை பல மண்டைகளாகக் கொள்ளீர் ! (எ-று.) (வி-ம்.) மண்டலிகர் - அரசர். புளகம் - சோறு. புளகச்சின்னம் -உண்கலத் தட்டுகள். பரப்பீரே - பரப்பிவைக்க. மண்டை - மண்டைஓடு. மண்டை - மட்கலம் மண்டைபோலப்பருமனாக இருத்தலான் மண்டை எனப்பட்டது: ஆகுபெயர். சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி' என்றார் இளங்கோவடிகளும். (87) |