இதுவும் அது

559.அழிந்த கலிங்கர் பொற்பரிசை
       அவைபொற் கலமாக் கொள்ளீரே
விழுந்த தவளக் குடைமின்னும்
      வெள்ளிக் கலமாக் கொள்ளீரே.

     (பொ-நி.) பொற்பரிசை  யவை பொற்கலமாகக்  கொள்ளீர் !  தவளக் குடை  வெள்ளிக்  கலமாக்  கொள்ளீர் !  (எ-று.)

     (வி-ம்.) அழிந்த - இறந்த. பரிசை-கேடயம். கலம்-ஏனம். தவளக்குடை
-வெண்கொற்றக் குடை. வெள்ளிக்கலம் - வெள்ளியாற்  செய்த  ஏனம்.  (88)