கூழைப் பங்கிடக் கருவி கொண்டது
 
560.நிலத்தைச் சமைத்துக் கொள்ளீரே
       நெடுங்கைக் களிற்றின் இருசெவியாம்
கலத்திற் கொள்ளக் குறையாத
      கலங்கள் பெருக்கிக் கொள்ளீரே.
 

     (பொ-நி.) நிலத்தைச் சமைத்துக் கொள்ளீர்! களிற்றின் இருசெவியாம்
கலங்கள் பெருக்கிக் கொள்ளீர்! (எ-று.)

     
(வி-ம்.) சமைத்தல்-திருத்தல். களிறு - யானை.  கலம் -பன்னிரண்டு
மரக்கால்.    கலம்    -   ஏனம்.    பெருக்கிக்கொள்ளீர்   - மிகுதியாக
அமைத்துக்கொள்ளுங்கள்.  களிற்றின் காதுகளையே  கூழை முகந்தெடுக்கும்
ஏனங்களாகக் கொள்க என்றபடியாம்.                             (89)