பகல் விளக்கும் பாவாடையும 561. | கதம்பெற் றார்க்கும் செறுநர்விழிக் | | கனலும் நிணமும் அணங்கின்பால் பதம்பெற் றார்க்குப் பகல்விளக்கும் பாவா டையுமாக் கொள்ளீரே. | (பொ-நி.) பதம் பெற்றார்க்கு, செறுநர் விழிக் கனலும் நிணமும், பகல் விளக்கும் பாவாடையுமாக் கொள்ளீர்! (எ-று.) (வி-ம்.) கதம் - சினம். ஆர்த்தல் - ஒலித்தெழல். செறுநர் - வீரர். விழிக்கனல் - விழியினின்று பெருகும் கனல் (சினத்தால் பெருகியது இன்னும் குன்றவில்லை யென்க.) நிணம் - கொழுப்பு. அணங்கு - காளி. பதம் - உயர்பதம். பகல்விளக்கு - பகலில் விளக்கேற்றல். பா ஆடை -(உணவுபடைக்க) விரிக்கப்படும் ஆடை. (90) |