உணவுபடைக்க அகப்பை கொள்ளல் 563. | கங்கா புரியின் மதிற்புறத்துக் | | கருதார் சிரம்போய் மிகவீழ இங்கே தலையின் வேல்பாய்ந்த இவைமூ ழைகளாக் கொள்ளீரே. | (பொ-நி.) சிரம் மதிற்புறத்து வீழ தலையின் வேல்பாய்ந்த இவை மூழைகளாகக் கொள்ளீர்! (எ-று.) (வி-ம்.) கங்காபுரி - கங்கைகொண்டசோழபுரம், கருதார் பகைவராகிய கலிங்கர். சிரம் - தலை. இங்கே - இந்தக்கலிங்கப்போரில் மூழை - அகப்பை. பகைவர் தலை அகப்பையாக; வேல் அதன் காம்பாயிற் றென்க. (92) |