மடையர்களைத் தேர்ந்தெடுத்தல்

564.கிடைக்கப் பொருது மணலூரில்
       கீழ்நாள் அட்ட பரணிக்கூழ்
படைத்துப் பயின்ற மடைப்பேய்கள்
      பந்தி தோறும் வாரீரே.

     (பொ-நி.)  மணலூரில்  பொருது, அட்ட,  கூழ் படைத்துப்  பயின்ற
மடைப்  பேய்கள்!  வாரீர்!  (எ-று.)

     (வி-ம்.) கிடைக்க -  போர்  கிடைக்க.  பொருது - (குலோத்துங்கன்)
போர்செய்து. கீழ்நாள் - முன்னாள். அட்ட- சமைத்த. படைத்தல்-பரிமாறுதல்;
பயின்ற- பழகிய. மடைப்பேய் - சமையற்றொழில் வல்ல பேய் பந்திதோறும்-
பந்திகள்  எல்லாவற்றிருக்கும்.                                   (93)