பிச்சை ஏற்கும் பார்ப்பனப் பேய்க்குக் கூழளித்தல் 565. | அவதி இல்லாச் சுவைக்கூழ் கண்டு | | அங்காந்து அங்காந்து அடிக்கடியும் பவதி பிட்சாந் தேகியெனும் பனவப் பேய்க்கு வாரீரே. |
(பொ-நி.) கூழ்கண்டு. அங்காந்து அங்காந்து, "பிட்சாந்தேகி" எனும் பனவப் பேய்க்கு வாரீர்! (எ-று.) (வி-ம்.) அவதி - அளவு. அங்காந்து -வாய்திறந்து. பவதி-அம்மையே. பிட்சாம் - பிச்சையை. தேகி - கொடு. பனவன்பார்ப்பன். ‘பவதி பிட்சாந்தேகி’ எனப் பார்ப்பனப் பேய் ஏற்புரை கூறிக் கேட்டதற்குப் பேய் கூழ் வார்க்குமாறு கூறிற்று. (94) |