சமண்பேய்கட்குக் கூழ் வார்த்தல் 566. | உயிரைக் கொல்லாச் சமண்பேய்கள் | | ஒருபோழ் துண்ணும் அவையுண்ண மயிரைப் பார்த்து நிணத்துகிலால் வடித்துக் கூழை வாரீரே. | (பொ-நி.) சமண் பேய்கள் ஒருபோழ் துண்ணும்; அவை உண்ண மயிரைப் பார்த்து வடித்துக் கூழை வாரீர்! (எ-று.) (வி-ம்.) ஒருபோழ்து -ஒருவேளை. பார்த்து-இல்லாமற்பார்த்து. நிணம் -கொழுப்பு. துகில் - சீலை. வடித்து - வடிகட்டி. (95) |