புத்தப்பேய்க்குக் கூழ் வார்த்தல் | 567. | முழுத்தோல் போர்க்கும் புத்தப்பேய் | | | மூளைக் கூழை நாக்குழறக் கழுத்தே கிட்ட மனந்திரியாக் கஞ்சி யாக வாரீரே. |
(பொ-நி.) புத்தப்பேய், நாக்குழற, கழுத்தே கிட்ட, கூழை வாரீர்! (எ-று.) (வி-ம்.) போர்க்கும் - ஆடையாகப் போர்க்கும். கழுத்தேகிட்ட -கூழ்குரல்வளை வரை முட்டிக்கிட்ட மணந்திரியா மூளைக் கூழ் என இயைக்க. மூளைக்கூழ் - மூளையாற் சமைத்த கூழ். நாகுழற- நாவுதடுமாற. (96) |