பார்வைப் பேய்க்குக் கூழ் வார்த்தல் 568. | கொய்த இறைச்சி உறுப்பனைத்தும் | | கொள்ளுங் கூழை வெள்ளாட்டின் பைதல் இறைச்சி தின்றுலர்ந்த பார்வைப் பேய்க்கு வாரீரே. |
(பொ-நி.) உலர்ந்த பார்வைப் பேய்க்கு, இறைச்சி உறுப்பனைத்தும் கொள்ளும் கூழை வாரீர்! (எ-று.) (வி-ம்.) கொய்த - அறுத்த. உறுப்பு - யானை குதிரைகளின் உறுப்பு. பைதல் - இளமையானது. உலர்ந்த - (அதுபோதாது) வாடிய. பார்வைப்பேய் -மந்திரக்காரப் பேய் ; மேற் பார்வையிடுகின்ற பேய். (97) |