குருட்டுப் பேய்களுக்குக் கூழ் வார்த்தல் | 569. | ஊணா தரிக்கும் கள்ளப்பேய் | | | ஒளித்துக் கொண்ட கலந்தடவிக் காணாது அரற்றுங் குருட்டுப்பேய் கைக்கே கூழை வாரீரே. | (பொ-நி.) கள்ளப்பேய் கொண்டகலம் தடவி அரற்றும் குருட்டுப் பேய் கைக்கு வாரீர்! (எ-று.) (வி-ம்.) ஊண்-உணவு. ஆதரிக்கும்-ஆசைப்படும். ஒளித்துக்கொண்ட -மறைத்து வைத்துக்கொண்ட. கலம்-ஏனம். காணாது -அது இல்லாததால். அரற்றல் - கதறியழல். கைக்கு - அதன் கையில். (98) |