கூந்தலியல்பு கூறி விளித்தது

57. இடையி னிலையரி திறுமிறு மெனஎழா
     எமது புகலிடம் இனிஇலை யெனவிழா
அடைய மதுகரம் எழுவது விழுவதாம்
   
அளக வனிதையர் அணிகடை திறமினோ.

     (பொ-நி)  "மதுகரம்  இடை இறும்  இறும்" என எழா "புகல் இடம்
இலை" என விழா, எழுவது விழுவதாம் அளக வனிதையர் திறமின்; (எ-று)

     (வி-ம்.) இடை - இடுப்பு. நிலை - பெறுதல். இறும் ஓடியும். (கூந்தல்
கொங்கைகளின் சுமையால் முடியும் எனல். எழா-கூந்தலை விட்டெழுந்தும்.
புகலிடம்-புகுதற்குரிய இடம்; தகுதியான இடம்; அடைக்கலம். இலை-வேறு
இல்லை. விழா - கூந்தலில் விழுந்து. அடைய - முழுதும். மதுகரம்-வண்டு,
அளகம்  -  கூந்தல்.  வனிதையர்  -  பெண்கள்.  கூந்தலில்  வண்டுகள
்விழுந்தும்   எழுந்தும்   பறத்தல்  கூறப்பட்டது.  வண்டுகள்  மங்கையர்
கூந்தலில்  படிதலும்,  அதை  நீங்கிப்  போதலும்  முதலிய செயல்களைத்
தற்குறிப்பேற்றமாக்கி   வேறு   புகலிடமில்லாது   தங்குவதாகவும்,  நாம்
நிலைத்திருப்பின்   இவள்   இடை   ஒடியுமே  என,  வருந்தி  எழுந்து
செல்வதாகவும் குறித்தநயம் மிக்க சிறப்புடையது.                  (37)