ஊமைப் பேய்க்குக் கூழ் வார்த்தல்
 
570பையாப் போடு பசிகாட்டிப்
       பதலை நிறைந்த கூழ்காட்டிக்
கையால் உரைக்கும் ஊமைப்பேய்
      கைக்கே கூழை வாரீரே.

     (பொ-நி.)  பசி  காட்டி,  கூழ்  காட்டி,  உரைக்கும்  ஊமைப் பேய்
கைக்கு  வாரீர்! (எ-று.)

     
(வி-ம்) பையாப்பு - துன்பம். பதலை - தாழி.  கையால்  உரைக்கும்
-கைகளினாற்  கூறுகின்ற.  ஊமைப்  பேய் - ஊமையாகிய பேய்.      (99)