சூற்பேய்க்குக் கூழ் வார்த்தல் 571. | அடைந்த செவிகள் திறந்தனவால் | | அடியேற்கு என்று கடைவாயைத் துடைத்து நக்கிச் சுவைகாணும் சூற்பேய்க்கு இன்னும் சொரியீரே. |
(பொ-நி.) செவிகள் திறந்தனவால் என்று, கடைவாயைத் துடைத்து, நக்கிச் சுவை காணும் சூல் பேய்க்கு இன்னும் சொரியீர்! (எ-று.) (வி-ம்.) அடைத்த செவிகள் - பசியால் அடைபட்டிருந்த காதுகள், கூழ்கண்ட மகிழ்ச்சியால்திறந்தன என்க. கடைவாய் - வாயின் கடைசியை. கூழ்கண்ட அளவில் வாயில் நீர் ஊறினமையின் இருவாய்க் கடைகளிலும் நாவைச் செலுத்தி நக்கிற்றென்க. சூல் - கரு. சொரியீர் -கூழ்வாருங்கள். (100) |