அறிவற்ற பேய்க்கு கூழ்வார்த்தல் 572. | பொல்லா ஓட்டைக் கலத்துக்கூழ் | | புறத்தே ஒழுக மறித்துப்பார்த்து எல்லாங் கவிழ்த்துத் திகைத்திருக்கும் இழுதைப் பேய்க்கு வாரீரே. | (பொ-நி.) கூழ் புறத்தே ஒழுக, மறித்துப் பார்த்து எல்லாம் கவிழ்த்துத் திகைத்திருக்கும் பேய்க்கு வாரீர்! (எ-று.) (வி-ம்.) பொல்லா - கெட்ட. ஓட்டைக் கலத்துக்கூழ் - உடைந்த ஏனத்திலுள்ள கூழ். ஏழன்தொகை. மறித்தல் தலைகீழாகத் திருப்பல். எல்லாம்-கூழ்எல்லாம். கவிழ்த்து, கீழேசாய்த்துக் கொட்டி. திகைத்திருக்கும் -திகில்கொண்டிருக்கின்ற. இழுதை-அறிவற்றது. (101) |