நோக்கப் பேய்க்குக் கூழ் வார்த்தல்

573. துதிக்கைத் துணியைப் பல்லின்மேற்
        செவ்வே நிறுத்தித் துதிக்கையின்
நுதிக்கே கூழை வார்என்னும்
     நோக்கப் பேய்க்கு வாரீரே.

     (பொ-நி.) துதிக்கைத்  துணியை   நிறுத்தி,  நுதிக்கே  கூழை வார்
என்னும் நோக்கப் பேய்க்கு வாரீர்! (எ-று.)

     (வி-ம்.) துணி-துண்டம்.  பல்- தன்  பல்.  செவ்வே  செவ்வையால்;
நேராக. நுதி-நுனி. பூ  நோக்கன் - இறந்தார்  வீட்டுள்  ஒருவகைத்  தாரை
ஊதும் தொழில் பூண்ட ஒருவகைக் குலத்தினன்.                   (102)