கூத்திப் பேய்க்கு கூழ் வார்த்தல் 574. | தடியான் மடுத்துக் கூழெல்லாம் | | தானே பருகித் தன்கணவன் குடியான் என்று தான்குடிக்கும் கூத்திப் பேய்க்கு வாரீரே. |
(பொ-நி.) கூழெல்லாம் தடியால் மடுத்துப் பருகி, கணவன் குடியான் என்று குடிக்கும் கூத்திப் பேய்க்கு வாரீர்! (எ-று.) (வி-ம்.) தடி - தசை. மடுத்து - அமிழ்த்தி. கூழ் - தன்கூழ். குடியான் -குடிக்கமாட்டான். கூத்திப் பேய்க்கு - கூத்தாடுகின்றதான பெண்பேய்க்கு. குடிக்கும்- (கணவன் கூழையும்) குடிக்கும். (103) |