விருந்தாக வந்த பேய்க்குக் கூழருத்தல
 
575.வருகூழ்ப் பரணிக் களங்கண்டு
       வந்த பேயை முன்னூட்டி
ஒருகூழ்ப் பரணி நாமிருக்கும்
     ஊர்க்கட் பேய்க்கு வாரீரே.
 

     (பொ-நி.) களம்,  கண்டு  வந்த  பேயை  முன்  ஊட்டி,  ஊர்க்கட் பேய்க்குக்  கூழ்  வாரீர்! (எ-று.)

     (வி-ம்.) கூழ்வரு - கூழ்.   அடுத்தல் - பொருந்திய.   வந்தபேயை
-விருந்தாக வந்த பேயினை, ஊட்டி-உண்பித்து. பரணிவாரீர்  என இயைக்க. பரணி - (உண்)கலம்.  ஊர்க்கண் - ஊரிலுள்ள.                    (104)