கனவு கண்டுரைத்த பேய்க்கு இரட்டைப்பங்கு கொடுத்தல | 576. | இரவு கனவு கண்டபேய்க்கு | | | இற்றைக் கன்றி நாளைக்கும் புரவி உரித்தோற் பட்டைக்கே கூழைப் பொதிந்து வையீரே. | (பொ-நி.) கனவுகண்ட பேய்க்கு, தோற்பட்டை(யில்)க்கு நாளைக்கும் கூழைப் பொதிந்து வையீர்; (எ-று.) (வி-ம்.) கனவு கண்ட- கனவில் கண்டு சொன்ன. பேய்க்கு - கணிதப் பேய்க்கு. புரவி-குதிரை. உரித்தோல் - உரியாகிய தோல்; ஒரு பொருட் பன்மொழி. பட்டை- தொன்னை. (105) |