கணக்குப் பேய்க்குக் கூழ் வார்த்தல்

577.இணக்கம் இல்லா நமையெல்லாம்
        எண்ணிக் கண்டேம் என்றுரைக்கும்
கணக்கப் பேய்க்கும் அகங்களிக்கக்
      கையால் எடுத்து வாரீரே.

     (பொ-நி.) நமை  எல்லாம்  எண்ணி, உரைக்கும் கணக்கப் பேய்க்கும்
வாரீர்! (எ-று.)

     (வி-ம்.) இணக்கம்-ஒன்றுகூடி வாழல். எண்ணி-கணக்கிட்டு.  கண்டேம்
-சரி என்று கண்டேம். அகம் களிக்க - மனமகிழ.                   (106)