பேய்கள் உண்ணுதல் 578. | மென்குடர் வெள்ளைகு தட்டீரே | | மெல்விரல் இஞ்சிய துக்கீரே முன்கையெ லும்பினை மெல்லீரே மூளையை வாரிவி ழுங்கீரே. | (பொ-நி.) குடர் குதட்டீர்! இஞ்சி அதுக்கீர்! எலும்பினை மெல்லீர்! மூளையை விழுங்கீர்! (எ-று.) (வி-ம்.) வெள்ளை மென்குடர் என இயைக்க. குதட்டுதல் - குதப்புதல்; மெல்லுதல். விரல் இஞ்சி-விரல்களாகிய இஞ்சியை; பண்புத்தொகை. அதுக்கீர் -அலகில் ஒதுக்குங்கள். (107) |