நடை இயல்புகூறி விளித்தது 58. | உபய தனமசையில் ஒடியுமிடை நடையை | | ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு அபய மபயமென அலற நடைபயிலும் அரிவை மீர்கடைகள் திறமினோ. | (பொ-நி.) சிலம்பு "இடை ஒடியும்; நடையை ஒழியும் ஒழியும்" என, "அபயம் அபயம்" என அலற, நடை பயிலும் அரிவைமீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.) உபயம்-இரண்டு. தனம்-கொங்கை. இடை-இடுப்பு. ஒழியும்- விட்டொழியும். ஒள்-ஒளி பொருந்திய. .அலற-ஒலி செய்ய. நடை பயிலும்- நடக்கும். அரிவை - பெண். சிலம்பு இடை ஒடியுமென அரற்றியதாகக ்கூறினார். மாதர்கள் ஆடவர்களைப் போல் மிகுதியாக நடத்தலின்மையின ்நடை பயிலும் என்றார். (38) |
|
|