இதுவும் அது
 

580.தமக்கொரு வாயொடு வாய்மூன்றும்
       தாமினி தாப்படைத் துக்கொண்டு
நமக்கொரு வாய்தந்த நான்முகனார்
      நாணும் படிகளித் துண்ணீரே.

     (பொ-நி.) தமக்கு ஒரு வாயொடு வாய் மூன்றும்  படைத்துக்கொண்டு,
நமக்கு  ஒருவாய்  தந்த  நான்முகனார்  நாணும்படி  உண்ணீர் ! (எ-று.)

     
(வி-ம்.) ஒருவாய்- ஒரே வாய் - மேற்கொண்டு  மூன்றுவாய் தமக்குப்
படைத்துக்கொண்டிருக்கின்ற   நான்முகனார்   வஞ்சகர்.    எனவே,  அவர்
நாணும்படி ஒரே வாயால்  நான்கு  வாயினால்  உண்ணுமளவுக்குமேல்  நாம்
உண்போம். நான்கு  வாய்  நமக்குப்  படைத்துத்  தந்திருந்தால்  எவ்வளவு
விரைவில் இக்  கூழை  உண்ணலாம் எனப் பேய்கள் கூறின.         (109)