இதுவும் அது
 
581. ஓடி உடல்வியர்த் துண்ணீரே
       உந்தி பறந்திளைத் துண்ணீரே
ஆடி அசைந்தசைந் துண்ணீரே
      அற்ற தறவறிந் துண்ணீரே.

     (பொ-நி.) உடல்வியர்த்து உண்ணீர்! இளைத்து  உண்ணீர்! அசைந்து
உண்ணீர் ! அறிந்து உண்ணீர்! (எ-று.)

     (வி-ம்.) உடல்  வியர்த்து - உடம்பில்  வேர்வை   உண்டாக. உந்தி
பறத்தல்-ஒரு  விளையாட்டு;  (இளமகளிர்  இருவர்  எதிர்  எதிராக  நின்று
கைகோத்துச் சுற்றுதல்.) இளைத்து - உண்ட  கூழ்  அற்று  இளைத்து.  அற
அற்றது  அறிந்து  என  இயைக்க.  அற்றது - செரித்தது.            (110)