உண்டவாய் பூசல்

582.கொதித்த கரியின் கும்பத்துக்
       குளிர்ந்த தண்ணீர் தனைமொண்டு
பொதுத்த தொளையால் புகமடுத்துப்
      புசித்த வாயைப் பூசீரே.

      (பொ-நி.) கரியின் கும்பத்துத் தண்ணீர்தனைத் தொளையால் மடுத்து
மொண்டு வாயைப் பூசீர்! (எ-று.)

      (வி-ம்.) கொதித்த-சினங்கொண்ட. கரி-யானை. கும்பம் - தலையாகிய
குடம். பொதுத்த-அம்பால் பொத்த. மடுத்து-அமிழ்த்தி.வாய்பூசல்-வாய்கழுவல்.
பூசீர்-கழுவுங்கள்                                              (111)